தூய ஜெபமாலை அன்னை திருத்தலத்தின் இறைமக்களே! நமது திருத்தலத்தின் Rosary Shrine App (செயலி) மீண்டும் 93-ஆம் ஆண்டு பெருவிழாவில் வெளியிடப்பட உள்ளது. நமது பங்கு சமூக ஊடங்களின் வாயிலாகவும் வளர்ச்சி பெற்று இறையாட்சியை விதைப்பது பெரும் மகிழ்ச்சிக்குறியது. இறைமக்கள் அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு கேட்டு கொள்கிறோம்.
Rosary Shrine App பதிவிறக்கம் செய்ய 👇
https://median.co/share/krmqxdm#apk
தூய ஜெபமாலை அன்னைத் திருத்தலச் செயலியின் (Rosary Shrine App) அம்சங்கள்:
தினசரி வாசகங்கள் மற்றும் புனிதர்கள்:
ஒவ்வொரு நாளுக்குரிய திருவிவிலிய வாசகங்களும், புனிதர்களையும் அறிந்துகொள்ளும் வசதி.
நேரலை ஒளிபரப்பு (Watch Live):
திருத்தலத்தில் நடைபெறும் திருப்பலிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை நேரடியாகப் பார்க்கும் வசதி (Rosary TV).
வேண்டுதல் சமர்ப்பிக்கும் வசதி:
உங்கள் செப வேண்டுதல்களைச் சமர்ப்பிப்பதற்கானப் பகுதி.
தமிழில் ஜெபமாலை:
தமிழில் ஜெபமாலை செபிப்பதற்கான செபப் பகுதிகள் மற்றும் வழிகாட்டல்.
ஆலய வரலாறு மற்றும் நிகழ்வுகள்:
திருத்தலத்தின் வரலாறு மற்றும் நடைபெறவுள்ள திருவிழாக்கள், சிறப்பு நிகழ்வுகள் பற்றிய விவரங்கள்.
புகைப்படத் தொகுப்பு (Gallery): திருத்தலம் மற்றும் நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பார்க்கும் பகுதி.
பங்குத் தகவல்கள்:
பங்குத் தந்தைகள் மற்றும் ஆலயத்தில் இயங்கும் அமைப்புகள் பற்றிய தகவல்கள்.
தமிழ் கத்தோலிக்கப் பாடல்கள்:
தமிழ் கத்தோலிக்க கிறித்தவ பக்திப் பாடல்கள் மற்றும் செபமாலை தொடர்பான பாடல்களைக் கேட்கும் வசதி. பாடல் வரிகளுடன் அமைந்துள்ளது.